இளவரசர் வில்லியம்ஸ் எதிரில் அணி வகுப்பின் போது மயங்கி விழுந்த வீரர்கள்
பிரித்தானியா இளவரசர் வில்லியம்ஸ் முன் அணி வகுப்பில் ஈடுபட்ட குதிரைப்படை வீரர்கள் வெப்பம் தாங்க முடியாது சுருண்டு விழுந்துள்ளனர்.
வருடாந்த Trooping the Colour என்ற நிகழ்ச்சியை முன்னிட்டு இளவரசர் வில்லியம்ஸ் முன் ஒத்திகை அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், ஒரே நேரத்தில் 3 வீரர்கள் சுருண்டு விழுந்தனர். அப்போது லண்டனில் வெப்பநிலை 30 டிகிரியை தாண்டியதால், வீரர்கள் வெப்பம் தாங்க முடியாமல் கீழே விழுந்தனர்.
Trooping the Colour மன்னரின் உத்தியோகபூர்வ பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் வருடந்தோறும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும். இதற்காக ஆண்டுதோறும் அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
இதன் ஒரு கட்டமாக இளசரசர் வில்லியம்ஸ் முன் வீரர்கள் ஒத்திகை அணி வகுப்பை வருகின்றனர்.
அதேவேளை, வெப்பம் அதிகமாக இருந்ததால், வெப்பம் காரணமாக மூன்று வீரர்கள் சரிந்து விழுந்ததாக பிரிட்டன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை இளவரசர் வில்லியம்ஸ் டுவிட்டரில் வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் வில்லியம்ஸ், “இன்று காலை அணி வகுப்பில் பங்கேற்ற சகல படை வீரர்களுக்கும் மிக்க நன்றி.
கடினமான சூழ்நிலைகளில் உங்கள் கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவீர்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த எம்மால் முடிந்ததை செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
வீரர்கள் தங்கள் கடமையின் ஒரு பகுதியாக கம்பளி ஆடைகள் மற்றும் வெற்று தோல் தொப்பிகளை அணிந்திருந்தனர்.
இதன் காரணமாக, மயங்கி விழுந்த வீரர்களுக்கு மருத்துவர்கள் உடனடி சிகிச்சையளித்தனர். எதிர்வரும் 17 ஆம் திகதி பிரமாண்டமாக நடைபெறும் Trooping the Colour நிகழ்வை பிரித்தானிய மன்னர் மூன்றாவது சார்லஸ் மேற்பார்வையிடுவார்.