தந்தை கண் முன்னே ரஷ்ய இளைஞரை கொன்ற சுறா பிடிபட்டது
சுற்றுலா சென்றிருந்த ரஷ்ய இளைஞர் ஒருவரை அவரது தந்தையின் கண் முன்னே கபளீகரம் செய்த சுறா மீனை அதிகாரிகள் பிடித்துள்ளார்கள்.
ரஷ்யாவிலிருந்தால் உக்ரைனுடன் போருக்குச் செல்ல நேரிடலாம் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவோ என்னவோ எகிப்துக்கு தன் தந்தையுடன் சுற்றுலா சென்றுள்ளார் விளாடிமிர் (23) என்ற இளைஞர்.ஆனால், Hurghada என்னுமிடத்தில் கடற்கரைக்குச் சென்றிருந்த விளாடிமிர் கடலில் நீந்திக்கொண்டிருக்க, அவரது தந்தை கரையிலிருந்தவண்ணம் அவரைக் கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது திடீரென அங்கு வந்த ஒரு சுறா, விளாடிமிரைத் தாக்கத் துவங்கியுள்ளது. சுற்றுலாப்பயணிகள் அலறி சத்தமிட, தந்தையின் கண் முன்னேயே விளாடிமிரை கபளீகரம் செய்துவிட்டது அந்த சுறா.
இந்நிலையில், விளாடிமிரைக் கொன்ற சுறாமீனை அதிகாரிகள் பிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள். அது ஒரு புலிச் சுறா என அவர்கள் கூறியுள்ளார்கள்.அந்த சுறா மீனை மீனவர்கள் பிடித்து கரைக்குக் கொண்டுவரும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த சுறா இதற்குமுன் வேறு யாரையாவது கொன்றுள்ளதா என்பதை அறியும் ஆராய்ச்சியில் அறிவியலாளர்கள் இறங்கியுள்ளார்கள்.