இஸ்ரோ வரலாற்றிலேயே அதிக எடையுள்ள செயற்கைக்கோள்: எல்விஎம் 3 மூலம் விண்ணில் பாய்கிறது
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அமெரிக்காவின் ‘புளூபோர்ட்-6’ என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை எதிர்வரும் டிசம்பர் 24-ஆம் திகதி விண்ணில் ஏவவுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து எல்விஎம் 3 ரக ராக்கெட் மூலம் காலை 8.55 மணிக்கு இந்த ஏவுதல் நடைபெறவுள்ளது. 6,500 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தியதிலேயே அதிக எடையுள்ள செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைதூரப் பகுதிகளுக்கு அதிவேக 5G இணையதள சேவைகளை வழங்க உதவும் இந்தத் திட்டம், இஸ்ரோவின் வர்த்தக பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.





