ஸ்காட்லாந்து வரலாற்றில் முதல்முறை: ஜனவரியில் NHS மருத்துவர்கள் மாபெரும் வேலைநிறுத்தம்
ஸ்காட்லாந்து வரலாற்றில் முதல் முறையாக, தேசிய சுகாதார சேவையின் (NHS) வதிவிட மருத்துவர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
2008 ஆம் ஆண்டு நிலவிய ஊதிய மட்டத்திற்கு இணையாகச் சம்பளத்தை உயர்த்துவதாக அளித்த வாக்குறுதியை ஸ்காட்லாந்து அரசாங்கம் மீறிவிட்டதாகக் கூறி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சங்கமான பி.எம்.ஏ (BMA) நடத்திய வாக்கெடுப்பில், 92 சதவீதமான மருத்துவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதன்படி, ஜனவரி 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் ஜனவரி 17 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணி வரை நான்கு நாட்களுக்கு இந்த வேலைநிறுத்தம் நடைபெறும்.
மருத்துவர்களின் இந்த அதிரடி முடிவு காரணமாக, அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் பெருமளவில் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
எனினும், அரசாங்கம் ஒரு நம்பகமான ஊதியத் திட்டத்தை முன்வைத்தால் போராட்டத்தைத் தவிர்க்க முடியும் என மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.





