உலகம் செய்தி

விண்வெளிக்கு பயணம் செய்யும் முதல் சக்கர நாற்காலி வீரர்

உலக பணக்காரர் ஜெஃப் பெசோஸால்(Jeff Bezos) நிறுவப்பட்ட விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின்(Blue Origin), முதல் முறையாக சக்கர நாற்காலி(wheelchair) வீரரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது.

விண்வெளி(aerospace) மற்றும் மெக்கட்ரானிக்ஸ்(mechatronics) பொறியாளரான மைக்கேலா மிச்சி பென்தாஸ்(Michaela “Michi” Benthaus), வரவிருக்கும் NS-37 பயணத்தில் ஐந்து குழு உறுப்பினர்களுடன் இணைய உள்ளார்.

2018ம் ஆண்டு ஏற்பட்ட சைக்கிள் விபத்திற்குப் பிறகு சக்கர நாற்காலியில் இருக்கும் பென்தாஸுடன், பொறியாளர் ஹான்ஸ் கோனிக்ஸ்மேன்(Hans Koenigsmann), தொழில்முனைவோர் நீல் மில்ச்(entrepreneur Neil Milch), முதலீட்டாளர்கள் ஜோய் ஹைட்(Joey Hyde), அடோனிஸ் பௌரூலிஸ்(Adonis Bouroulis) மற்றும் ஜேசன் ஸ்டான்செல்(Jason Stanzel) ஆகியோர் இந்த பயணத்தில் இணைவார்கள்.

மைக்கேலா பென்தாஸ் ஒரு ஜெர்மன் விண்வெளி மற்றும் மெக்கட்ரானிக்ஸ் பொறியாளர் ஆவார்.

இவர் மெக்கட்ரானிக்ஸ்(mechatronics), ரோபாட்டிக்ஸ்(robotics) மற்றும் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங்(automation engineering) ஆகியவற்றில் பட்டப்படிப்பை முடித்தார், பின்னர் முனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்(University of Munich) முதுகலைப் பட்டம் பெற்றார்.

ஏப்ரல் 2024ல், போலந்தில் உள்ள லூனரேஸ் ஆராய்ச்சி நிலையத்தில்(Lunares Research Station in Poland) ஒரு அனலாக் விண்வெளி வீரர் பணியில் பென்தாஸ் பங்கேற்றார், அங்கு அவர் ஒரு சர்வதேச குழுவுடன் இரண்டு வார தனிமைப்படுத்தும் பயிற்சியின் போது பணித் தளபதியாக பணியாற்றியுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!