எதிர்காலத்தில் ரஷ்யாவின் வான்வெளி திறக்கப்படுமா?

‘ரஷ்யாவின் வான்வெளி எதிர்காலத்தில் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என ஏர்லைன் தலைமை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) இயக்குனர் ஜெனரல் வில்லி வால்ஷ் மேற்படி கூறியுள்ளார்.
“விமான நிறுவனங்கள் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் நீண்ட பாதையில் செல்ல வேண்டும் என்பதை அங்கீகரிக்க தங்கள் அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து அனைத்து வணிக விமானங்களுக்கும் ரஷ்ய வான்வெளி மூடப்பட்டுள்ளது. வான்வெளியை மீண்டும் திறக்க உக்ரைனில் போர் அமைதியுடன் நிறைவடைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)