நிலாவெளியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் லஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் கைது!!
திருகோணமலை நிலாவெளி பகுதியில் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது இன்று (16) செய்யப்பட்டுள்ளார்.
நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டுப் பயணத்திற்குத் தயாராகும் ஒரு பெண்ணிடம் பொலிஸ் சான்றிதழ் பெற்று தருவதாக கூறி பணம் கேட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்
முன்கூட்டியே திட்டமிடப்பட்ட படி இலஞ்ச ஊழல் ஆணை குழுவினரை வரவழைத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு படத்தைக் கொடுக்கும் போது இவரை கைது செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளை விசாரணை செய்து வருவதுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.





