செய்தி விளையாட்டு

ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட பத்திரன மற்றும் நிஸ்ஸங்க

அடுத்த வருடம் நடைபெறவுள்ள 19வது இந்தியன் பிரீமியர் லீக்(IPL) கிரிக்கெட் போட்டிக்கான சிறிய ஏலம் அபுதாபியில்(Abu Dhabi) தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த சிறிய ஏலத்தில் இலங்கையை சேர்ந்த இரு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன(Matheesa Pathirana) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(Kolkata Knight Riders) அணியால் 18 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ்(Chennai Super Kings) அணிக்காக விளையாடிய பத்திரன அடுத்த வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாட உள்ளார்.

அவரை தொடர்ந்து, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பெதும் நிஸ்ஸங்க(Pathum Nissanka) டெல்லி கேப்பிட்டல்ஸ்(Delhi Capitals) அணியால் 4 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.

பெதும் நிஸ்ஸங்கவிற்கு இது முதல் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் ஆகும்.

தொடர்புடைய செய்தி

IPL ஏலம் : 20 மில்லியன் இந்திய ரூபாய்க்கு விலைப்போன ஹசரங்க

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!