நாளை நடக்கப்போவது என்ன? இன்று வெளியான அறிக்கை
நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்ட வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், நாளை (8) வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் பல இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளது.
மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் தற்காலிக பலத்த காற்றோட்டம் மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடியதால் பொது மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





