ஐரோப்பாவை அடையும் முயற்சியில் 18 புலம்பெயர்வோர் பலி!
கிரீஸ் ( Greek island) தீவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மத்திய தரைக் கடலை கடற்க முற்பட்ட 18 புலம் பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்று நிரப்பப்பட்ட பாதுகாப்பற்ற படகில் பயணித்த அவர்கள் படகு மூழ்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
குறித்த படகு பாதி மூழ்கிய நிலையில் துருக்கிய வணிகக் கப்பல் ஒன்றினால் இனங்காணப்பட்டதாகவும், இருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது தெரியவில்லை எனவும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.
மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் மோதல்கள் மற்றும் வறுமை காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய கிரீஸ் ஒரு முக்கிய பாதையாக காணப்படுகிறது.
இவ்வாறு ஐரோப்பாவை அடையும் முயற்சியில் பாதுகாப்பான பயணங்களை கடல்மார்க்கமாக மேற்கொள்ளும் பலர் உயிரிழப்பதும் ஒரு பொதுவான நிகழ்வாக மாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





