தெற்கு லெபனானில் ஐ.நா அமைதிப்படையினர் மீது தாக்குதல் – ஆறு பேர் கைது
தெற்கு லெபனானில்(Lebanon) ரோந்து சென்ற ஐ.நா அமைதிப்படை வீரர்கள் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் ரோந்து வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் யுனிஃபில்(UNIFIL) எனப்படும் ஐ.நா படை தெரிவித்துள்ளது.
லெபனான் இராணுவத்தின் உளவுத்துறை இயக்குநரகம் தாக்குதலைத் தொடர்ந்து விசாரணை நடத்தி ஆறு சந்தேக நபர்களைக் உடனடியாக கைது செய்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலிய(Israel) எல்லைக்கு அருகிலுள்ள லிட்டானி(Litani) ஆற்றின் தெற்கே யுனிஃபில் மீதான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.




