செய்தி பொழுதுபோக்கு

வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியை(Warner Bros. Discovery) $83 பில்லியனுக்கு வாங்கும் நெட்ஃபிக்ஸ்(Netflix)

பிரபல ஒளிபரப்பு நிறுவனமான நெட்ஃபிக்ஸ்(Netflix), திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஸ்டுடியோவான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி(Warner Bros. Discovery) நிறுவனத்தை கிட்டத்தட்ட $83 பில்லியனுக்கு வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இதன் மூலம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு திரைப்பட பட்டியல் மற்றும் மதிப்புமிக்க ஸ்ட்ரீமிங் சேவையான HBO Maxஐ அணுக அனுமதிக்கிறது.

2019ம் ஆண்டில் டிஸ்னி ஃபாக்ஸை(Disney Fox) $71 பில்லியனுக்கு கையகப்படுத்தியதிலிருந்து பொழுதுபோக்கு துறையில் நடந்த மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவாகும்.

“இன்றைய அறிவிப்பு உலகின் இரண்டு சிறந்த ஒளிபரப்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்கிறது” என்று வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் ஜாஸ்லாவ்(David Zaslaw) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்தை வாங்க, நெட்ஃபிக்ஸ், காம்காஸ்ட்(Comcast) மற்றும் பாரமவுண்ட்(Paramount) ஆகியவற்றுக்கு இடையேயான கடுமையான மோதல் நடைபெற்ற நிலையில் இறுதியில் நெட்ஃபிக்ஸ் உடன் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஹாலிவுட்(Hollywood), உலகளவில் உள்ள சினிமா துறைகளில் அதிர்ச்சி மற்றும் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!