மொட்டு கட்சி அரசுக்கு ஆதரவா? – நாடாளுமன்ற உறுப்பினர் சானக விளக்கம்
2026ம் நிதி ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்புக்கு நாம் எதிராக வாக்களிக்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி(Sri Lanka Podujana Peramuna) அறிவித்துள்ளது.
எனினும், இதன்மூலம் தமது கட்சி அரசாங்கத்தை ஆதரிக்கின்றது என அர்த்தப்படாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி. சானக(DV.Chanaka) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சானக எம்.பி, “அனர்த்தத்துக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டமே இது. இதனை நிறைவேற்றி எவ்வித பயனும் இல்லை. எனவே, புதிய வரவு- செலவுத் திட்டம்தான் அவசியம். அதற்குரிய முயற்சியை அரசாங்கம் செய்ய வேண்டும். அதற்குரிய சாத்தியமும் தென்படவில்லை.
எனவே, இந்த பாதீட்டை எதிர்த்து பயன் இல்லை. அதனால் நாம் எதிராக வாக்களிக்கமாட்டோம்” என குறிப்பிட்டுள்ளார்.




