வதந்திகளை பரப்பாதீர்: எதிரணிகளுக்கு எச்சரிக்கை!
நெருக்கடியான சூழ்நிலையில் போலி தகவல்களைப் பரப்பும் சந்தர்ப்பவாத அரசியலை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், “போலி தகவல்களை பரப்பாமல் இருப்பதுதான் தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் செய்யும் சிறந்த சேவையாக இருக்கும். அதேபோல சந்தர்ப்பவாத அரசியலை கைவிட்டுவிட்டு நாட்டை மீட்க ஒன்றுபட வேண்டும்.
அத்துடன், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களை அங்கு குடியமர்த்தாமல் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.




