வரவு செலவு திட்டம்!! மகிந்த தரப்பு கடும் எதிர்ப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் நிதியாண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு- செலவுத் திட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
” மக்களை ஏமாற்றும் விதத்திலேயே வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
” குறுகிய காலப்பகுதிக்குள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்கள் வரவு- செலவுத் திட்டத்தில் இல்லை.
உறுதிமொழிகள் இடம்பெற்றிருந்தாலும் அவற்றை நிறைவேற்றுவதற்குரிய வழிகாட்டல் இல்லை. இலக்கங்களை குறிப்பிடலாம், அதனை அடைவதற்குரிய வேலைத்திட்டமும் பாதீட்டில் இல்லை.
ஆக மொதத்தத்தில் எவ்வித அடிப்படையும் இன்றி மக்களை ஏமாற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டமே இதுவாகும்.” – எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.





