போதைப்பொருள் கும்பல்களை ஒழிக்க முயன்ற மெக்சிகன் மேயர் சுட்டுக்கொலை
வன்முறை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் நிறைந்த ஒரு பகுதியில் நடந்த பொது நிகழ்வின் போது, மெக்சிகன்(Mexican) நகர மேயர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மேற்கு மாநிலமான மிக்கோவாகனில்(Michoacan) உள்ள உருபானில்(Urbán) ஒரு தேவாலயத்திற்கு வெளியே நடந்த கூட்டத்தில் மேயர் கார்லோஸ் மான்சோ(Carlos Manzo) கலந்து கொண்டிருந்தபோது ஆயுதமேந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஸ்பானிஷ் செய்தித்தாள் எல் பைஸ்(El Pais) தெரிவித்துள்ளது.
இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக எல் பைஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
குற்றக் கும்பல்களால் மிரட்டி பணம் பறிப்பதற்கு எதிராக அடிக்கடி குரல் கொடுத்த மிக்கோவாகன் விவசாய பிரதிநிதி பெர்னார்டோ பிராவோ(Bernardo Bravo) சுட்டுக் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த கொலை இடம்பெற்றுள்ளது.





