“ஜனநாயகத்துக்காக முன்னிலையாவதற்கு பதவிகள் தேவையில்லை”: நாமல் ராஜபக்ச
 
																																		ஜனநாயகத்துக்காக முன்னிலையாவதற்கு பதவிகள் தேவையில்லை. எதிரணிக்குரிய பொறுப்பை நாம் நிறைவேற்றுவோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று (31) தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார பயணத்துக்கு எதிராகவே 21 ஆம் திகதி ஒன்றிணையவுள்ளோம்.நல்லாட்சியின்போது எதிரணிக்குரிய பொறுப்பை நாம் சிறப்பாக நிறைவேற்றினோம். இனியும் அவ்வாறு நடப்போம்.
அரசியல் என்பது தருணம் பார்த்து நடத்த வேண்டியது அல்ல. மக்களுக்கு பிரச்சினை வரும்போது முன்னிலையாக வேண்டும். அந்த பணியை நாம் செய்வோம்.”எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
 
        



 
                         
                            
