மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கவை எதிர்கொள்ளும் இந்தியா
 
																																		2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்தவகையில், நவி மும்பையில்(Navi Mumbai) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
நாணய சுழற்சியை வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றது.
ஆஸ்திரேலிய அணி சார்பில், ஃபோப் லிட்ச்ஃபீல்ட்(Phoebe Litchfield) 119 ஓட்டங்களும் எல்லிஸ் பெர்ரி(Ellyse Perry) 77 ஓட்டங்களும் ஆஷ்லீ கார்ட்னர்(Ashley Gardner) 63 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில், 339 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில், ஹர்மன்பிரித் கவுர்(Harmanpreet Kaur) 89 ஓட்டங்களும் அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ்(Jemimah Rodrigues) 127 ஓட்டங்களும் பெற்றனர்.
இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
 
        



 
                         
                            
