கனதரா ஓயாவில்(Kanadara Oya) இருந்து பெருந்தோகையான தோட்டாக்கள் மீட்பு
மதவாச்சி – வஹமல்கொல்லேவ பகுதியிலுள்ள கனதர ஓயாவில் இருந்து T-56 தாக்குதல் துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 41 தோட்டாக்களையும், இரண்டு மகசின்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இந்த தோட்டாக்கள் நேற்று சனிக்கிழமை (25) மதவாச்சி காவல் நிலைய அதிகாரிகள் குழுவினரால், கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெடிமருந்துகளை அந்த இடத்திற்கு கொண்டுவந்த நபர்களின் அடையாளத்தை கண்டறிய, மதவாச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
(Visited 3 times, 1 visits today)





