சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்லும் ரொக்கெட்டை ஏவிய ஜப்பான்!
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள H3 ராக்கெட்டை ஜப்பானின் விண்வெளி நிறுவனம் இன்று வெற்றிகரமாக ஏவி சோதனை செய்துள்ளது.
தெற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா (Tanegashima) விண்வெளி மையத்திலிருந்து H3 ராக்கெட்டின் மேல் HTV-X1 விண்கலத்தை பொருத்தி வெற்றிகரமாக ஏவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்கலம் பிரிக்கப்பட்டு திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வைக்கப்பட்டது என்று JAXA தெரிவித்துள்ளது.
திட்டமிட்டப்படி அனைத்தும் சீராக நடந்தால் பொருட்களை வழங்க இன்னும் சில நாட்களே எடுக்கும் என விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.
(Visited 3 times, 3 visits today)





