ஐரோப்பா செய்தி

உக்ரைனை தாக்கிய ரஷ்யா – 03 பேர் பலி!

உக்ரைன் (Ukrainian)தலைநகர் கீவ்வை (Kyiv) குறிவைத்து ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் 07 குழந்தைகள் உட்பட 29 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் 19 வயது சிறுமி ஒருவரும் அவரது 46 வயது தாயாரும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனின் கீவ் பகுதியில் ரஷ்யா சுமார் 101 ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது, மேலும் அவற்றில் சுமார் 90 ஆளில்லா விமானங்களை அழிக்க உக்ரைன் படைகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

உக்ரைன் – ரஷ்யா போர் கடந்த 03 ஆண்டுகளை கடந்த தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்குலக நாடுகளின் பொருளாதார தடைகளையும் மீறி ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வருகிறது.

ஆரம்பத்தில் உக்ரைனை இலகுவாக வீழ்த்திவிடலாம் என்று நினைத்த ரஷ்யாவிற்கு இது பெரும் ஏமாற்றம் தான். காரணம் போர் தொடங்கியபோது கீவ் இவ்வளவு தூரம் போராடும் என ரஷ்யா எதிர்பார்த்திருக்காது.

மேற்குலக நாடுகள் ஆதரவு கரம் நீட்ட உக்ரைன் தொடர்ந்து களத்தில் முன்னேறி வருகிறது. இரு தரப்பில் இருந்தும் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. இருப்பினும் கள நிலவரங்களை அவதானிக்கையில் போர் இன்னும் சில வருடங்களுக்கு நீட்டிக்க வாய்ப்பிருக்கிறது.

ட்ரம்ப் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சமதான பேச்சுவார்தைகளும் கைக்கொடுக்கில்லை. இந்நிலையில் ட்ரம்ப்பும் தற்போது பொருளாதார தடைகளை ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார். எவ்வாறாயினும் ரஷ்யாவும் பொருளாதாரத்தை மேம்படுத்த மாற்று பாதைகளை நாட தொடங்கியுள்ளது.

இதற்கிடையே மேற்குலக நாடுகளில் நடைபெறும் இந்த போரை சில ஆசிய நாடுகள் பயன்படுத்திக்கொள்கின்றன என்றால் அது மிகையாகாது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து மிகப் பெரிய அளவில் எண்ணெய் கொள்முதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் ட்ரம்ப் இந்தியா மீது அதிகளவிலான வரி விதிப்புகளை மேற்கொண்டிருந்தார்.

ஆனால் ரஷ்யா இந்தியாவிற்கு ஆதரவாக விலைக்கழிவில் எண்ணெயை விநியோகம் செய்துள்ளது. எப்படி பார்த்தாலும் “ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற கதையாகத்தான் இருக்கிறது.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி