இலகுவாக உடல் எடையைக் குறைக்க 10 எளிய வழிகள்
வாழ்க்கை முறையில் எளிய மற்றும் நிலையான மாற்றங்களைச் செய்வதன் மூலமே சாதாரணமாக உடல் எடையைக் குறைக்க முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
4 மாதங்களில் 25 கிலோ எடையைக் குறைத்த அனுபவம் கொண்ட உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அமாகா என்பவர், உடல் எடையைக் குறைப்பதற்கான 10 முக்கிய வழிமுறைகளைப் பகிர்ந்துள்ளார்.
- நீங்கள் பசியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், குறைவான கலோரி அளவில் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
- உங்கள் உணவில் 80% சிக்கன், மீன், முட்டை, பீன்ஸ் மற்றும் காய்கறிகள் போன்ற அதிக புரதம், அதிக நார்ச்சத்துள்ள உணவுகளாக இருக்கட்டும். இது பசியைக் கட்டுப்படுத்தி அதிக கலோரிகளை எரிக்க உதவும். மீதமுள்ள 20% உங்களுக்குப் பிடித்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
- ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 8,000 முதல் 10,000 அடிகள் நடப்பது கொழுப்பை எளிதில் கரைக்க மிக முக்கியம்.
- உடல் பருமனுக்கு உண்மையான எதிரி சர்க்கரைதான். சோடா, ஜூஸ் மற்றும் பேக்கரி உணவுகளைக் குறைத்தால், உடல் எடையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உணரலாம்.
- தீவிரமான ஓட்டம் போன்ற கார்டியோ பயிற்சிகளைவிட, எடை தூக்கும் (Weight Training) பயிற்சிகள் கொழுப்பை வேகமாகக் கரைக்கும்.
- சரியான தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். தூக்கமின்மை மன அழுத்தத்தை அதிகரித்து, பசியைக் கொடுத்து, வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கும்.
- உணவுக்கு முன்னும் பின்னும் தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து, அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்கும்.
- தீவிரமாக எதிலும் ஈடுபடாமல், நிலையான மற்றும் தொடர்ச்சியான எளிமையான உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதே போதுமானது.
- உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களை நேர்மையாகக் கடைப்பிடியுங்கள். ஒரு வாரத்தில் எவ்வளவு எடை குறைந்துள்ளது என்று அவ்வப்போது கவனம் செலுத்துங்கள்.
- உடல் எடையைக் குறைப்பதில் பொறுமை மிகவும் அவசியம். முதலில் ஒரு மாதக் குறிக்கோளை வைத்துக்கொண்டு, அதனைத் தொடர்ந்து நீட்டித்துக் கொண்டே செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
(Visited 7 times, 7 visits today)





