ஐஸ்லாந்தில் முதன்முறையாக நுளம்புகள் கண்டுபிடிப்பு – ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்

ஐஸ்லாந்தில் முதன்முறையாக நுளம்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகி, அந்நாட்டு விஞ்ஞானிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் நுளம்புகள் இல்லாத இரு முக்கிய நாடுகளில் ஒன்றாக இதுவரை ஐஸ்லாந்து அறியப்பட்டிருந்தது. மற்றையது அன்டார்ட்டிக்கா ஆகும்.
பல வாரங்களாக நடத்திய விரிவான ஆய்வின் முடிவில் இந்த மூன்று நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பூச்சிகளில் தீவிர அக்கறை கொண்ட ஆர்வலரான யோன் ஜல்ரசன் (Gísli Jón Jónasson) தெரிவித்துள்ளார் என BBC செய்தி வெளியிட்டுள்ளது.
சமீப காலமாக சுற்றுச்சூழல் உஷ்ணம் ஐஸ்லாந்தில் அதிகரித்ததை அடுத்தே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
வெப்பமயமாதலின் விளைவாகவே இந்த நுளம்புகள் தற்போது அங்கு வந்து சேரவோ அல்லது இனப்பெருக்கம் செய்யவோ வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு, புவி வெப்பமடைதலின் தாக்கம் மற்றும் ஐஸ்லாந்தின் தனித்துவமான சூழலியல் அமைப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்து விஞ்ஞானிகள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.