இலங்கை

செவ்வந்தி மண்ணுக்குள் புதைத்த கையடக்க தொலைபேசி மீட்பு: மேலும் பல தகவல்கள் அம்பலம்!

பாதாள குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்குரிய திட்டமிடலுக்கு இஷாரா செவ்வந்தி பயன்படுத்தினார் எனக் கூறப்படும் கையடக்க தொலைபேசி சிக்கியுள்ளது.

கம்பஹா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது. எனவே, அதனை ஆய்வு செய்த பின்னர் மேலும் பல முக்கிய தகவல்கள் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இஷாரா செவ்வந்தி, ஜே.கே. பாய் உள்ளிட்ட தரப்புகளிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் பிரகாரம் தேடுதல் வேட்டைகளும், கைதுகளும் இடம்பெற்றுவருகின்றன. நேற்றைய தினமும் தேடுதல் வேட்டை அரங்கேறியது.

இதற்கமைய இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினர் எனக் கூறப்படும் நால்வர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குகின்றார். அவர் தனது அத்தையின் வீட்டில் செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்தார் எனக் கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே இக்கைது இடம்பெற்றுள்ளது.

செவ்வந்தி தலைமறைவாகி இருந்த இடங்கள் மற்றும் சென்ற இடங்களுக்கு அவரை நேற்று நேரில் அழைத்துச்சென்று விசாரணைகள், தேடுதல்கள் இடம்பெற்றன. அதேவேளை, கொலைச்சம்பவம் இடம்பெற்ற பின்னர் 2 மாதங்கள்வரை செவ்வந்தி மத்துகம மற்றும் மித்தெனிய பகுதிகளில் தலைமறைவாகி இருந்துள்ளார். அதன்பின்னரே வெளிநாடு சென்றுள்ளார். உள்ளாட்சிசபைத் தேர்தல் நடந்த மே மாதம் காலப்பகுதியிலேயே அவர் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இருந்தபோது தமிழினி என்ற பெயரிலேயே அவர் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். அந்த பெயரில் அடையாள அட்டையொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜே.கே. பாய் என்பவரே இதற்கு உதவியுள்ளார். அவர் நேபாளத்தில் இருந்து ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பிச்செல்வதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெற்றிருந்தன.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்