இஸ்ரேலிய படைகளால் பத்து வயது பாலஸ்தீன சிறுவன் சுட்டுக் கொலை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஹெப்ரானுக்கு (Hebron) தெற்கே உள்ள அல்-ரிஹியா (al-Rihiya) கிராமத்தில் 10 வயது பாலஸ்தீன சிறுவன் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளார்.
முகமது அல்-ஹல்லாக் (Mohammed al-Hallaq) என அடையாளம் காணப்பட்ட சிறுவன் நண்பர்களுடன் பாடசாலை வளாகத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு பிறகு சிறுவன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பொதுமக்களுக்கு எதிராக, குறிப்பாக சிறார்களுக்கு எதிராக நேரடி வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதை உரிமை அமைப்புகள் பலமுறை கண்டித்துள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 8 times, 1 visits today)