ஐரோப்பா செய்தி

பயங்கரவாத குற்றச்சாட்டில் 15 உக்ரைன் வீரர்களுக்கு சிறைத்தண்டனை விதித்த ரஷ்ய நீதிமன்றம்

தெற்கு ரஷ்யாவில் உள்ள ஒரு நீதிமன்றம் 15 உக்ரேனிய வீரர்களை பயங்கரவாதக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.

ரோஸ்டோவ்-ஆன்-டானில் (Rostov-on-Don) உள்ள இராணுவ நீதிமன்றம், ரஷ்யா பயங்கரவாதக் குழுவாகப் பெயரிட்ட ஐடர் (Idar) படைப்பிரிவை சேர்ந்த 15 பேருக்கு 15 முதல் 21 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மார்ச் மாதத்திற்குப் பிறகு, உக்ரேனிய போர்க் கைதிகள் மீதான இரண்டாவது விசாரணை இதுவாகும்.

இதற்கு முன்னதாக, உயர்மட்ட அசோவ் (Azov) படைப்பிரிவின் 23 உறுப்பினர்கள் இதேபோன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர்.

இந்நிலையில், உக்ரைனின் மனித உரிமைகள் தூதர் டிமிட்ரோ லுபினெட்ஸ் (Dmytro Lubinets), விசாரணையை “வெட்கக்கேடானது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி