இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ரஷ்யாவின் முக்கிய இலக்குகளை தாக்க அமெரிக்கா அனுமதி – உக்ரைனுக்கு கிடைக்கவுள்ள ஆயுதம்

ரஷ்யாவின் முக்கிய இலக்குகளை தாக்க உக்ரைனுக்கு டொமாஹாக்ஸ் ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரஷ்யாவுக்குள் நீண்ட துாரம் சென்று தாக்குவதற்கு தேவையான உளவு தகவல்களை வழங்கவும் அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது.

மோதல் முடிவுக்கு வராத நிலையில் இவ்வாறு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது.

அமெரிக்கா இதுபோன்ற உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவது இதுவே முதல்முறையாகும்.

இதன் மூலம் ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் குழாய் வழிகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் உட்பட ரஷ்ய எரிசக்தி உள்கட்டமைப்பை குறி வைத்து தாக்குதல் நடத்துவது எளிதாக்கும்.

நீடித்த மோதலுக்கு மத்தியில், எரிசக்தி மற்றும் எண்ணெய் வளங்கள் ரஷ்யாவின் மிக முக்கியமான வருவாய் ஈட்டும் ஆதாரமாக உள்ளதால் அதை தகர்ப்பதற்கு குறி வைக்கப்படுகிறது.

ரஷ்யாவுக்கான வருவாயை கட்டுப்படுத்தினால், உக்ரைன் உடனான போரை புடின் முடிவுக்கு கொண்டு வருவார் என டிரம்ப் கருதுவதால் இது குறித்து பரிசீலித்து வருகிறார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!