முறையாக இல்லத்தை ஒப்படைக்காத மஹிந்த – உரிய நடவடிக்கைக்கு தயாராகும் அரசாங்கம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் ஒப்படைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறி மூன்று வாரங்கள் கடந்துள்ளன.
எனினும், அவர் குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தை பொது நிர்வாக அமைச்சிடம் இதுவரை ஒப்படைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்பு சலுகைகளை இரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 1 visits today)





