பண்டாரகம-களுத்துறை வீதியில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட மூன்று வாகனங்கள் ; 11 பேருக்கு காயம்
பண்டாரகம-களுத்துறை வீதியில் லொறி, வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் நடனக் குழுவைச் சேர்ந்தவர்கள்.
மொரந்துடுவவிலிருந்து பயணித்த லொறி பண்டாரகமவை நெருங்கிக்கொண்டிருந்தபோது, எதிர் திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியைக் கடந்து லொறியுடன் மோதியது. லொறி ஓட்டுநர் பிரேக் போட்டதால் லொறியின் பின்னால் வந்த வேன் லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் பண்டாரகம மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 14 times, 1 visits today)





