TikTok விற்பனை – முக்கிய ஆணையில் கையெழுத்திட்ட டிரம்ப்
டிக்டோக் செயலியின் அமெரிக்க நிர்வாகத்தை உள்ளூர், வெளியூர் முதலீட்டாளர்களிடம் விற்பதற்குரிய நிர்வாக ஆணையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
டிக்டோக் செயலியை அமெரிக்காவில் தடை செய்ய முன்னதாக அறிவித்த உத்தரவையும் டிசம்பர் 16ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
சீன அரசாங்கத்தின் ஒப்புதலோடு நிறுவனத்தின் அமெரிக்க விற்பனையைச் சீராக நடத்தி முடிக்க அவர் அவ்வாறு செய்துள்ளதாக நம்பப்படுகிறது.
டிரம்ப் சீன ஜனாதிபதி Xi Jinping உடன் உரையாடியபோது தமது திட்டங்களை விளக்கியதாகவும் அதற்கு Xi சம்மதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் டிக்டோக்கை நிர்வகிக்கவுள்ள புதிய நிறுவனத்தின் மதிப்பு சுமார் 14 பில்லியன் டொலராகயிருக்கும் என்று துணையதிபர் ஜே டி வான்ஸ் தெரிவித்தார்.
அமெரிக்கர்களின் தரவுகளைப் பாதுகாப்பதிலும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் புதிய நிறுவனம் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டது.





