ஆசிய கோப்பையை காண வரும் ரசிகர்களுக்கு டுபாய் பொலிஸார் எச்சரிக்கை
ஆசிய கோப்பையை காண வரும் ரசிகர்களுக்கு டுபாய் பொலிஸார் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, மைதானங்களில் விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று அவர்கள் அறிவித்தனர்.
அதன்படி, அத்துமீறி நுழைதல், தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருதல் அல்லது அநாகரீகமாக நடந்துகொள்வது போன்ற குற்றங்களுக்கு, 5,000 திர்ஹாம்கள் வரை அபராதம் அல்லது மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
போட்டியில் ஒழுக்கத்தையும் விளையாட்டுத் திறனையும் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மிகவும் பிரபலமான போட்டிக்கு இந்த விதிகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று டுபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பார்வையாளர்கள் தங்கள் நடத்தையில் பொறுப்புடன் இருக்கவும், விளையாட்டை மதித்து ஒழுக்கத்தைப் பேணவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஏதேனும் மீறல்கள் நடந்தால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என்றும் டுபாய் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





