இலங்கையில் கோர விபத்து – மூவர் பலி – நால்வர் படுகாயம்
குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில் தலாவ மீரிகம பகுதியில் லொறி ஒன்றும் மற்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 04 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 52 times, 1 visits today)





