போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கு சீனா அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஜெலென்ஸ்கி

மாஸ்கோவின் எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு பெய்ஜிங்கிற்கு அமெரிக்கா விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, தனது நாட்டில் போரை முடிவுக்குக் கொண்டுவர சீனா ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கக்கூடும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை பெய்ஜிங் மாஸ்கோவிற்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
“சீனாவும் இங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது, ரஷ்யா இப்போது முழுமையாக நம்பியிருக்கும் ஒரு சக்திவாய்ந்த நாடு சீனா” என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் போரின் போது பயன்படுத்த ரஷ்யாவிற்குப் பொருட்களை வழங்குவதை பெய்ஜிங் கடுமையாக மறுக்கிறது, மேலும் மோதலைத் தீர்க்க உதவத் தயாராக இருக்கும் ஒரு பாரபட்சமற்ற தரகராக தன்னை சித்தரிக்க முயன்று வருகிறது குறிப்பிடத்தக்கது.