இந்தூர் விமான நிலையத்தில் பயணியை கடித்த எலி
இந்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் எலி தாக்கி இரண்டு புதிதாகப் பிறந்த பெண்கள் இறந்ததை தொடர்ந்து உள்ளூர் விமான நிலையத்தில் ஒரு பயணி தன்னை எலி கடித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தூரில் இருந்து பெங்களூருக்குச் சென்ற ஒருவரை விமான நிலையத்தின் புறப்படும் பகுதியில் எலி கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திற்குப் பிறகு விமான நிலைய மருத்துவர் பயணிக்கு உரிய சிகிச்சைகளை வழங்கி பயணத்தை மேற்கொள்ள உதவியுள்ளனர்.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் திகதி இரவு இந்தூர் அரசாங்கத்தால் நடத்தப்படும் மகாராஜா யஷ்வந்த்ராவ் சிகிச்சைப் பிரிவின் (MYH) தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) எலிகள் தாக்கியதில், பல்வேறு பிறவி உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட இரண்டு புதிதாகப் பிறந்த பெண்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.





