பாகிஸ்தானில் PUBG விளையாட்டால் 4 குடும்ப உறுப்பினர்களை கொன்ற இளைஞனுக்கு 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பாகிஸ்தானில் PUBG விளையாடிய இளைஞன் ஒருவருக்கு தனது தாய், சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகளைக் கொன்றதற்காக 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லாகூரில் உள்ள கூடுதல் அமர்வு நீதிபதி ரியாஸ் அகமது, 17 வயதான ஜைன் அலிக்கு நான்கு குற்றச்சாட்டுகளில் 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 4 மில்லியன் பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளார்.
குற்றவாளியின் வயது காரணமாக சந்தேக நபருக்கு நான்கு ஆயுள் தண்டனைகள், ஒவ்வொரு கொலைக்கும் 25 ஆண்டுகள் விதிக்கப்பட்டுள்ளது.
லாகூரில் கஹ்னா பகுதியில் வசிக்கும் ஜைன் அலி, 2022ம் ஆண்டில் தனது அதிக நேரத்தை PUBG விளையாட்டிற்காக செலவிட்டதால் தாயார் நஹித் முபாரக்கால் அடிக்கடி கண்டிக்கப்பட்டார்.
விளையாட்டில் கொடுக்கப்பட்ட இலக்குகளை அடையத் தவறிய பிறகு ஆக்ரோஷமான ஜைன் அலி, தாயின் கைத்துப்பாக்கியை எடுத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதலில், 45 வயது தாய் நஹித் முபாரக், அவரது 20 வயது மூத்த சகோதரர் தைமூர் மற்றும் இரண்டு சகோதரிகளான 15 வயது மஹ்னூர், 10 வயது ஜன்னத் கொல்லப்பட்டனர்.