விளையாட்டு

பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த அபிஷேக் சர்மா! புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்

ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 போட்டியில், செப்டம்பர் 21, 2025 அன்று டுபாயில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா (74ரன்கள், 39 பந்துகள்) என அதிரடியாக விளையாடியது இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமான பங்காக இருந்தது. முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “இந்திய அணி வெற்றி மட்டுமல்ல, நடனமாடி வெற்றி பெற்றது. அபிஷேக் மற்றும் கில் ஆகியோரின் பேட்டிங் அற்புதமாக இருந்தது,” என்று பாராட்டினார்.

அபிஷேக் ஷர்மா, பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிடியின் முதல் பந்தை முன்கூட்டியே கணித்து, குறுகிய பந்தை எதிர்பார்த்து அடித்ததை கவாஸ்கர் வியந்து புகழ்ந்தார். “அபிஷேக், மனதளவில் பந்துவீச்சாளரை வென்றார். இந்த இளம் வீரருக்கு சிறந்த கிரிக்கெட் மூளை உள்ளது,” என்று கவாஸ்கர் கூறினார்.

அது மட்டுமின்றி, இந்த ஆட்டத்தில் ஷஹீன் அப்ரிடியை சிக்ஸருக்கு விரட்டியதை கவாஸ்கர், “பாகிஸ்தானின் தரமான பந்துவீச்சை எதிர்கொண்டு அபிஷேக் காட்டிய திறமை அபாரம்,” என்று பாராட்டினார்.இந்த வெற்றி, இந்திய அணியின் உற்சாகத்தை உயர்த்தியது, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கவாஸ்கர், “அபிஷேக் பேட்டிங் செய்யும்போது, மைதானத்தில் ரசிகர்களும் நடனமாடுவார்கள். இந்திய அணி பாடும்போது, எதிரணி ஆட வேண்டியதுதான்,” என்று கூறி, இந்தியாவின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், இந்திய அணி வெற்றிபெற்ற பிறகு அவருடைய கொண்டாட்டத்திற்கான காரணம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ” இந்திய அணி மீது அன்பு செலுத்துபவர்களுக்காக தான் L-வடிவத்தில் கையை வைத்து கொண்டாடினேன்” எனவும் விளக்கம் அளித்தார்.

அதே சமயம், இந்தப் போட்டியில், அபிஷேக் ஷர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மற்றொரு சாதனை படைத்தார். 331 பந்துகளில் 50 சிக்ஸர்கள் அடித்து, குறைந்த பந்துகளில் இந்த இலக்கை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன், மேற்கிந்திய தீவுகளின் எவின் லூயிஸ் 366 பந்துகளில் இந்த சாதனையை வைத்திருந்தார். இந்தப் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் (SKY) 510 பந்துகளில் 50 சிக்ஸர்களுடன் 5-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ