ஓய்வு முடிவை திரும்ப பெற்ற தென் ஆப்பிரிக்க விக்கெட் காப்பாளர் குயிண்டன் டி காக்

அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
முதலில் டெஸ்ட் தொடரும் அதனை தொடர்ந்து T20 மற்றும் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகி உள்ளார். இதனால் டெஸ்ட் அணியின் கேப்டனாக மார்க்ரம் இடம் பெற்றுள்ளார்.
T20 அணிக்கு டேவிட் மில்லர் மற்றும் ஒருநாள் அணிக்கு மேத்யூ ப்ரீட்ஸ்கே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டகாரர் மற்றும் விக்கெட் காப்பாளரான குயிண்டன் டி காக் T20 மற்றும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.
அவர் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். டிகாக் கடந்த ஆண்டு நடந்த T20 உலகக் கோப்பை தொடருடன் தனது ஓய்வு முடிவை அறிவித்திருந்தார்.
(Visited 3 times, 1 visits today)