இந்த வருடத்தில் தொழில் தேடி வேறு நாடுகளுக்கு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாத காலப்பகுதியில் மொத்தம் 212,302 இலங்கைத் தொழிலாளர்கள் வேலைதேடி பிற நாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது அதிகமாக காணப்படுகிறது. குவைத் இலங்கைத் தொழிலாளர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்களை உள்வாங்கிக் கொண்டது.
அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (41,180) மற்றும் கத்தார் (30,263) ஆகிய நாடுகளுக்கு தொழிலாளர்கள் சென்றுள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர்கள் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகரித்து வருவதையும் SLBFE அவதானித்துள்ளது, 8,015 பேர் ஜப்பானுக்கும் 4,324 பேர் தென் கொரியாவுக்கும் வேலை வாய்ப்புகளுக்காகச் செல்கின்றனர்.





