ஹமாஸ் அமைப்பினருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ஹமாஸ் அமைப்பினருக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் கடந்த 2 ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.
மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருவதுடன், அதற்காக அவர் பலமுறை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில், 48 இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் இன்னும் சிறைபிடித்து வைத்துள்ளதால், அந்த அமைப்பினருக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, பணயக்கைதிகள் உடனடியாக வீடு திரும்ப வேண்டும். இந்தப் போரையும் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தான் முன்வைத்த நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவே, அவர்களுக்கான இறுதி எச்சரிக்கையாகும். இதன் பிறகு எந்த ஒரு எச்சரிக்கையும் விடுக்கப்படாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வளைத்தத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, ட்ரம்பின் எச்சரிக்கையை அறிந்த ஹமாஸ் அமைப்பினர், இது போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தெளிவான அறிவிப்பு என்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அனைத்து பயணக்கைதிகளையும் விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு மீண்டும் தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.