இன்டர்நேஷனக்ஸ் டி ஸ்ட்ராஸ்பர்க் போட்டியில் வெற்றிப்பெற்ற உக்ரைன் வீராங்கணை!

உக்ரேனிய டென்னிஸ் வீராங்கனையான எலினா ஸ்விடோலினா தனது பரிசுத் தொகையை உக்ரைனின் குழந்தைகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
பிரான்சில் நடைபெறும் இன்டர்நேஷனக்ஸ் டி ஸ்ட்ராஸ்பர்க் போட்டியில் தனது பரிசுத் தொகையை தனது தாய்நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவாக வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏழாவது முறையாக போட்டியில் பங்கேற்ற அவர், 6-2, 6-3 என்ற கணக்கில் ரஷ்ய வீராங்கனையான அன்னா பிளிங்கோவாவை தோற்கடித்து தனது 17வது WTA பட்டத்தை வென்றார்.
28 வயதான அவர் தனது சொந்த நாட்டின் அவலநிலையை முன்னிலைப்படுத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
(Visited 22 times, 1 visits today)