இலங்கையில் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிப்பு
கண்டி – உடதும்பர, மீமுரே பகுதியில் சிற்றூர்தி ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
படுகாயமடைந்த மற்றுமொரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன்படி குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்தெனிய மருத்துவமனையிலிருந்து பேராதெனிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் நேற்றிரவு கண்டி, உடுதும்பர-மீமுரே பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





