இஸ்ரேலிய துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆர்வலர்கள் படகு
காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்ல முயன்ற 12 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற ஒரு படகு இஸ்ரேலியப் படைகளால் கைப்பற்றப்பட்ட பின்னர், இஸ்ரேலிய துறைமுக நகரமான அஷ்டோட்டுக்கு இழுத்துச் செல்லப்பட்டுளள்து
படகு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஸ்வீடிஷ் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உட்பட கப்பலில் இருந்தவர்கள் “நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதிசெய்ய மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்” என்றும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய கடற்படை முற்றுகையை மீறி காசாவிற்கு “குறியீட்டு” அளவிலான உதவியை கொண்டு வருவதை மேட்லீன் நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் அதை “செல்ஃபி படகு” என்று நிராகரித்தது, ஆர்வலர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்துவதாகக் தெரிவித்தது.





