தினமும் காலை 30 நிமிட நடந்தால் உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்
விடியற்காலையின் அமைதியான சூழலில் வாக்கிங் போவது ஒரு புத்துணர்ச்சியை அள்ளித் தரக் கூடியது. காலை உணவுக்கு முன் விறுவிறுப்பான 30 நிமிட நடை பயிற்சியில் ஈடுபடுவது, உங்கள் உடலில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி ஒரு சிறந்த வழி என்பதை மறுக்க இயலாது. நடைபயிற்சி இதய நோய், வகை 2 நீரிழிவு, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பல தீவிர நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
மேலும், நடைபயிற்சி தசைகளை வலுப்படுத்துகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
காலை நடைப்பயிற்சி வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. இது உங்கள் மெட்டபாலிஸத்தை மேம்படுத்தி, உங்கள் உடல் நாள் முழுவதும் ஊட்டச்சத்துக்களை திறம்பட உறிஞ்சிக் கொண்டு, ஆற்றலுடன் இருக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றம் துரிதமாக இருந்தால், உடல் பருமனை குறைத்தல் (Weight Loss Tips) எளிதாகும்.
இதய ஆரோக்கியம்
தினமும் நடைபயிற்சி செய்வதால் இதய ஆரோக்கியம் மேம்படும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. நடைபயிற்சி கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
நடைப்பயிற்சி சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உடலின் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது, இதன் மூலம் வகை 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது.
எடை இழப்பு
நடைபயிற்சி ஒரு சிறந்த கார்டியோ உடற்பயிற்சி ஆகும், இது கலோரிகளை எரிக்க உதவுகிறது. வழக்கமான நடைப்பயிற்சி உடல் கொழுப்பைக் குறைத்து எடையைக் குறைக்க உதவுகிறது.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
நடைபயிற்சி உடலின் பல்வேறு பகுதிகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இதன் காரணமாக உடலின் அனைத்து பாகங்களும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெறுகின்றன.
மன ஆரோக்கியம்
நடைபயிற்சி மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை குறைக்கிறது. இது மூளையில் எண்டோர்பின்களை வெளியிடுகிறது, இது மன நிலையை மேம்படுத்துகிறது மற்றும் மகிழ்ச்சியின் உணர்வை உருவாக்குகிறது.
எலும்புகள் மற்றும் மூட்டுகளின் வலிமை
நடைபயிற்சி எலும்புகளை பலப்படுத்துகிறது மற்றும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இது ஆஸ்டியோபோரோசிஸ், எலும்புகளின் பலவீனம் போன்ற அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது
வழக்கமான நடைப்பயிற்சி செரிமான அமைப்பை சிறப்பாகச் செயல்படுத்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
நடைபயிற்சியின் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
1. நடைபயிற்சியின் போது வசதியான காலணிகளை அணிவது முக்கியம். இதைச் செய்யாமல் இருப்பது உங்கள் பாதங்கள் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும்.
2. நடைபயிற்சியை மெதுவாகத் தொடங்கி, காலப்போக்கில் உங்கள் வேகத்தையும் தூரத்தையும் அதிகரிக்கவும்.
3. நடக்கும்போது நீர் சக்து பற்றாக்குறை இல்லாமல் வைத்திருப்பது அவசியம். எனவே, நடக்கும்போது தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள்.