அமெரிக்காவில் ஆபத்தாக மாறும் காட்டுத் தீ – 5 பேர் பலி
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் உள்ள 4 பிராந்தியங்களில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது.
இந்த காட்டுத்தீ காரணமாக இதுவரையில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க் கிழமை முதல் பரவி வரும் இந்த தீப்பரவல், லொஸ் ஏஞ்சலிஸ் வரலாற்றில் மிகப் பெரிய தீப்பரவல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர்.
குறிப்பாக லொஸ் ஏஞ்சலிஸின் பாலிசேட்ஸ் மற்றும் ஈட்டன் பகுதிகளில் 137,000 பேர் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)





