இலங்கையில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்கள் வைத்திருந்த ஒருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்களை வைத்திருந்த நபர் ஒருவர் பண்டாரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலுக்கு அமைய குங்கமுவ பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரிடம் இருந்து 4 வோட்டர் ஜெல் குச்சிகள், 890 கிராம் துப்பாக்கி மருந்து, 21 கிலோவுக்கும் அதிகளவான அம்மோனியம் நைட்ரேட், 56 டெட்டனேட்டர், 250 மீட்டர் நூல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
பண்டாரகம குங்கமுவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
(Visited 60 times, 1 visits today)





