செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க அதிகார மாற்றம் தொடர்பில் ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பு

அடுத்த வருடம் ஜனவரி மாதம் 20ஆம் திகதி அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடன் இதனை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் ஜனநாயகம் மேலோங்கியுள்ளது என்பதை தற்போதைய தேர்தல் பெறுபேறு உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேர்மையானதும், நீதியானதுமான தேர்தல் இடம்பெற்றுள்ளது. இந்தநிலைமை தொடர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவருடன் இணைந்து பணியாற்றுமாறு தமது பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்ததாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!