நமீபியாவில் நிலவும் கடும் வறட்சி : 700இற்கும் மேற்பட்ட விலங்குளை கொல்ல நடவடிக்கை!
நமீபியா 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ளது.
இதனால் 723 வன விலங்குகளை கொல்லப்போவதாக அறிவித்துள்ளது. 30 நீர்யானைகள், 60 எருமைகள், 50 இம்பாலாக்கள், 100 நீல காட்டெருமைகள், 300 வரிக்குதிரைகள், 83 யானைகள் என மொத்தமாக எழுநூறுக்கும் மேற்பட்ட விலங்குகளை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நமீபிய அரசாங்கத்தின் இந்த வறட்சி நிவாரணத் திட்டம் உணவுப் பாதுகாப்பின்மையால் போராடும் மக்களுக்கு ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு கூறியது.
நாட்டில் கடுமையான வறட்சி நிலவும் நிலையில், தலையீடு செய்யாவிட்டால், [மனித மற்றும் வனவிலங்கு] மோதல்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும். இதன்காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)