பின் வாங்கினார் தம்மிக்க பெரேரா – நாமல் போட்டியிடவுள்ளதாக தகவல்
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுவை தம்மிக்க பெரேரா ஏற்க மறுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனிப்பட்ட காரணங்களால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வரவில்லையென்றும் அதற்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றியென்றும் தெரிவித்து தம்மிக்க பெரேரா எம்.பி , பொதுஜன பெரமுனவின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்புமனுவை ஏற்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா கட்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நாமல் ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நாமல் ராஜபக்சவின் பெயரை அறிவிப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தம்மிக்க பெரேராவை வேட்பாளராக களமிறக்க அக்கட்சி தீர்மானித்திருந்த நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட பின்வாங்கியுள்ளதால் நாமல் ராஜபக்சவை களமிறக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.