உலகிலேயே விலையுயர்ந்த தங்கம் கலந்த தண்ணீர் – அதிர வைக்கும் விலை
உலகில் விலையுயர்ந்த தண்ணீர் ஒரு பாட்டிலின் விலை 55,000 அமெரிக்க டொலர்கள் என தெரியவந்துள்ளது.
அந்த தங்கத்தில் 24 கேரட் தங்கத் துகள்கள் கலந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2010 ஆம் ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் உலகிலேயே விலை உயர்ந்த தண்ணீர் என அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிபுடோ எ மோடிக்லியானி பதிவு செய்யப்பட்டது.
பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு நன்னீர் ஊற்றில் இருந்தும், ஃபிஜி நாட்டில் ஒரு நீரூற்றில் இருந்தும், ஐஸ்லாந்தின் பனிக்கட்டி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் ஆகிய மூன்றும் கலக்கப்பட்டு இந்த தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தில் 750 மில்லி லிட்டர் தண்ணீர் பேக்கேஜ் செய்யப்படுகிறது.
மேலும் 5கிராம் சுத்த தங்கமும் தண்ணீரில் கலந்திருக்கிறது. இதனால் தண்ணீர் அதிக காரத்தன்மையுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.