இன்ஸ்டா ஸ்டோரீஸ் போலவே கூகுள் போட்டோஸில் வெளியாகும் புதிய அம்சம்
கூகுள் அதன் போட்டோஸ் அப்ளிகேஷனில் அனைவரும் விரும்பும்படியான ஒரு புதிய அம்சத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. ஆன்ட்ராய்டு அதாரிட்டி வெளியிட்ட அறிக்கையின்படி, கூகுள் போட்டோஸ் கூடிய விரைவில் My Week என்ற ஒரு புதிய ஷேரிங் அம்சத்தை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த அம்சத்தை பயன்படுத்தி யூசர்கள் தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வார நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாம். இது கிட்டத்தட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் அம்சத்தைப் போன்றது. போட்டோக்களை செலக்ட் செய்து அதனை ஹைலைட் செய்வதன் மூலமாக இந்த அம்சத்தை யூசர்கள் பயன்படுத்தலாம்.
இந்த அம்சம் அனைத்து யூசர்களுக்கும் கிடைத்த பிறகு Memories carousel-இன் மேல் இடது மூலையில் டைல் ஒன்றை காண்பீர்கள். உங்களுடைய அவதாருக்கு அருகில் “Introducing My Week” மற்றும் ஒரு ‘+’ பட்டனை காணலாம். இந்த டைலை கிளிக் செய்வதன் மூலமாக ஒரு செட்டப் விசார்ட் திறக்கப்படும். அதில் யூசர்களின் கடந்த இரண்டு வாரங்கள் நடைபெற்ற நிகழ்வுகள் கொண்டுவரப்படும். அவற்றில் நீங்கள் ஷேர் செய்ய விரும்பும் போட்டோக்களை செலக்ட் செய்து பகிர்ந்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் உள்ள ஸ்டோரீஸ் போலவே பிற கூகுள் ஃபோட்டோஸ் பயனர்களுக்கு தங்களுடைய வார நினைவுகளை பார்க்கும்படி அழைப்புகளைக் கொடுக்கும் அம்சம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நீங்கள் அமைத்ததும் புகைப்படங்கள் அனைத்தும் Memories carouselல் அழகான கார்டில் டிஸ்ப்ளே செய்யப்படும். ஒரு புதிய My Week செக்ஷனை அணுகுவதற்கு யூசர்கள் அதனை டாப் செய்ய வேண்டும்.
இதன் மூலமாக நீங்கள் கடந்த வாரம் பகிர்ந்து கொண்ட போட்டோக்களை காண்பீர்கள். கூடுதலாக புகைப்படங்களை சேர்க்கவோ அல்லது நீங்கள் அழைப்பு விடுத்த கான்டாக்டுகளுக்கு மெசேஜ்களை அனுப்பவும் முடியும். அவர்கள் உங்களுடைய போட்டோக்களுக்கு லைக் செய்து, அதனை கமென்ட் செய்வதற்கான அனுமதியை பெறுவார்கள்.
கூகுள் போட்டோஸில் வெளியாகவுள்ள இந்த புதிய வார அம்சத்தை தவிர, மேலும் ஒரு சில சிறிய மாற்றங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் போட்டோ விவரங்களுக்கான UI மாற்றங்கள் உள்ளன. இதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட போட்டோ ஆல்பம் அல்லது மெமரியில் உள்ளதா என்பது போன்ற போட்டோ குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் புதிய மேப் சேர்க்கப்பட்டு Places பிரிவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து ஒரு புதிய டேட்டா டிரான்ஸ்ஃபர் கருவியை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலமாக எந்த ஒரு சிரமமும் இல்லாமல் யூசர்கள் தங்களுடைய நினைவுகளை கூகுள் போட்டோஸில் இருந்து iCloud போட்டோஸ்க்கு மாற்றிக் கொள்ளலாம். டேட்டா டிரான்ஸ்ஃபர் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த புதிய டேட்டா டிரான்ஸ்ஃபர் கருவி, சேவைகளுக்கு இடையேயான டிரான்ஸ்ஃபர் செயல்முறையை எளிமைப்படுத்துவதற்காக யூஸர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.